Bad Habits For Brain Health: உனக்கு மூளையே இல்லையா என பலரிடம் பல முறை திட்டு வாங்குபவரா நீங்கள்? இந்த பழக்கங்கள் உங்களிடம் உள்ளதா என ‘செக்’ செய்துக் கொள்ளுங்கள்
ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானவை என்றாலும், நமது பழக்க வழக்கங்களும் ஆரோக்கியத்தை தீர்மானிப்பவை. அதிலும் மூளை செயல்பாட்டை மோசமாக பாதிக்கும் பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...
உங்களின் சில கெட்ட பழக்கங்கள், உடல்ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த 4 கெட்ட பழக்கங்கள் படிப்படியாக உங்கள் மூளையை பலவீனப்படுத்துகிறது
மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது மிகவும் பொதுவான பிரச்சனையாகும். இதற்கு காரணம், வாழ்க்கை முறை தொடர்பான சில பழக்கவழக்கங்கள் தான்
ஆரோக்கியமான உணவை உண்ணாமல் இருப்பதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போனாலும் பிரச்சனை ஏற்படும். எனவே, ஆரோக்கியமான உணவுமுறை என்ற பழக்கத்தை கடைபிடிக்கவும்
தினமும் 7-8 மணி நேரம் தூங்கவில்லை என்றால், உங்கள் மூளை சரியாக செயல்படாது, அதனால் உங்கள் மனம் மிகவும் மெதுவாக வேலை செய்யத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், போதுமான அளவு உறங்குவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதன் தாக்கம் படிப்படியாக உங்கள் மூளையில் ஏற்படத் தொடங்கும். எனவே, மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்
பாடல்களை கேட்கும் பழக்கம் மனதிற்கு இதமளிப்பது தான். ஆனால், காதில் எப்போதும் ஹியர் போன் மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்கும் பழக்கம் உங்கள் மனதை பலவீனப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் மனதில் மட்டுமல்ல, உங்கள் காதுகளிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் மூளையின் திறனை மிகவும் மோசமாக பாதிக்கும். எனவே, நொறுக்குத் தீனிகளை உண்ணும் பழக்கத்தை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள்