தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் உங்களின் உடல்மொழிகள்

உடல்மொழி மூலமே உங்களின் தன்னம்பிக்கையை பிறர் அறிந்து கொள்வார்கள்

நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதை உங்கள் உடல்மொழியே காட்டிக் கொடுத்துவிடும். இந்த 5 உடல்மொழிகளில் கவனம் செலுத்துங்கள்

1 /6

கண் தொடர்பு - யாருடன் பேசும்போது அவர்களின் கண்களை பார்த்து பேசுங்கள். உங்களின் உறுதித் தன்மை கண்கள் காண்பித்துக் கொடுத்துவிடும். 

2 /6

கண்கள் பிறருடனான தொடர்பில் சமநிலையை ஏற்படுத்தும். உண்மை தன்மை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறி கண்.

3 /6

நிமிர்ந்து நில்லுங்கள் -தோல்களை குறுக்காமலும், தலைமை மேலே நேராக உயர்த்தியும் இருங்கள். உங்கள் உடல்மொழியின் இந்த தோரணை உங்கள் மீது நன்மதிப்பை பெற்றுக் கொடுக்கும். ஆரோக்கியத்தை பறைசாற்றும் உடல்மொழியும் இதுதான். 

4 /6

சரியான பதிலை கொடுக்கவும் -ஒருவர் பேசும்போது, ம்ம்... ஆஆ என சொல்லாமல் வார்த்தை மூலம் பதில் சொல்லுங்கள். மெதுவாக நிதானமாக பேசுங்கள். எதிரில் இருப்பவர் எந்த தொனியில் பேசினாலும் நீங்கள் நிறுத்தி பொறுமையாக பேசுங்கள். சொல்வதை தெளிவாக சொல்லுங்கள். 

5 /6

உணர்ச்சிகளை காட்ட வேண்டாம் - முகம் உங்கள் ஆழ் மனதின் உணர்ச்சிகளை காட்டிவிடும். அதனால் யாருடன் பேசும்போது பிற விஷயங்களை பற்றி நினைக்காமல் சரியான முகபாவனையுடன் எதிரில் இருப்பவருடன் பேசுங்கள். 

6 /6

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் முகம் காட்டிக் கொடுக்கவே கூடாது. அதாவது, உணர்ச்சிகள் முகத்தில் தெரியாத வண்ணம் இருக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.