வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! டாப்பில் நம்ம ஊர்...

7 Indian States That Are Visited By Foreigners In 2024 : இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில், ஒரு சில இடங்களுக்கு மட்டும்தான் வெளிநாட்டினர் விரும்பி வந்திருக்கின்றனர். அவை, என்னென்ன மாநிலங்கள் தெரியுமா?

7 Indian States That Are Visited By Foreigners In 2024 : இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில், குறிப்பிட்ட 7 மாநிலங்களுக்கு வெளிநாட்டினர் தொடர்ச்சியாக விசிட் அடிக்கின்றனர். அதில், நம்ம ஊர்தான் டாப்பில் இருக்கிறது. 

1 /7

டெல்லி:  டெல்லியில், பல்வேறு வரலாற்று சிரப்புமிக்க நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. இவை, வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் இந்திய மாநிலங்களில் 7வது இடத்தில் இருக்கிறது. 

2 /7

கோவா:  கோவாவில் இருக்கும் கடற்கரை, அங்கிருக்கும் இரவு பார்டி லைஃப், வெளிநாட்டினருக்கு ஏற்றதாக இருப்பதால் அவர்கள் அங்கு அடிக்கடி விசிட் செய்கின்றனர்.

3 /7

கேரளா: கேரளாவில் வெளிநாட்டினர் உள்பட பலர் ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கிருக்கும் ஆலப்பி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அதிகம் வெளிநாட்டினர் வருகின்றனர். 

4 /7

ராஜஸ்தான்: ராஜஸ்தானில், உதய்பூர், ஜெய்பூர் உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டினர் அதிகம் விசிட் செய்யும் இடங்களாக இருக்கின்றன. 

5 /7

உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் இருக்கும் தாஜ் மகால், வாரணாசி உள்ளிட்ட இடங்கள் வெளிநாட்டினர் அதிகம் வரும் இடங்களாக இருக்கின்றன. 

6 /7

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா, வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் இரண்டாவது இந்திய மாநிலமாக இருக்கிறது. 

7 /7

வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் முதல் இந்திய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாடு. மெரினா கடற்கரை, கோயில்கள் என சுற்றிப்பார்க்கும் பல இடங்கள் இருக்கின்றன. இதனால், தமிழகம் வெளிநாட்டினரால் அதிகம் விசிட் செய்யப்படும் மாநிலங்களில், இந்த ஆண்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.