மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் உண்டு

7th pay commission: புத்தாண்டில், 7வது ஊதியக் குழுவின் படி, ஜனவரி 2025-க்கான டிஏ உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் தொகை ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

7th pay commission: ஜனவரியில் டிஏ 56% ஆக அதிகரித்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.

1 /11

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக பலவித அரசு அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். இவற்றில். 18 மாத டிஏ அரியர் தொகை மற்றும் 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.  

2 /11

புத்தாண்டு 2025 -இன் துவக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 நல்ல செய்திகள் காத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7வது ஊதியக் குழுவின் படி, ஜனவரி 2025-க்கான டிஏ உயர்வு மற்றும் 18 மாத டிஏ அரியர் தொகை ஆகியவற்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

3 /11

ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை குறைந்தபட்சம் 3% சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் டிஏ மற்றும் டிஆர் 56 சதவீதமாக அதிகரிக்கும். இது மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.

4 /11

ஊதிய உயர்வு கணக்கீடு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஜனவரியில் டிஏ 56% ஆக அதிகரித்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.  

5 /11

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.

6 /11

இரண்டாவது நல்ல செய்தியாக கொரோனா களத்தில் முடக்கப்பட்ட 18 மாதங்களுக்கான அகவிலைப்படி அரியர் தொகையை அளிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 /11

பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை (18 Months DA Arrears) பற்றிய நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், டிஏ அரியர் தொகை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.  

8 /11

டிஏ அரியர் தொகை மூலம் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11800 முதல் அதிகபட்சமாக ரூ.37554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.

9 /11

லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவை. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.

10 /11

புத்தாண்டில் இந்த அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் அகவிலைப்படி அரியர் தொகை என இந்த இரண்டும் கிடைத்தால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இது அவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.