7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
7th Pay Commission: ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் படி பார்த்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால், இப்போது 50% ஆக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உயரும்.
7வது சம்பள கமிஷனின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி உள்ளது. ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு தொடர்பான ஒரு அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த முறையின் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுக்களின் படி, அடுத்த மூன்று மாதங்களில் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, புதிய அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் ஏற்படும். இது அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கும்.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள டெய்லி இந்தியா ப்யூரொ அறிக்கையில், இதுவரையிலான கணக்கீடுகளின்படி, பணவீக்கக் குறியீட்டில் 52.43 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீடு ஜூலை 31, 2024க்குள் நிறைவடையும். இதில் நல்ல எழுச்சி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
அடுத்த நிதியாண்டில் நல்ல அகவிலைப்படி உயர்வும் ஊதிய உயர்வும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஊழியர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும். இந்த முடிவை எடுக்க, ஜூலை 2024 வரையிலான தரவுகள் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் வகையில் தயாரிக்கப்படும்.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகள் அளிக்கப்படுகின்றன. இதன் கீழ் ஜனவரி 2024 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 50% அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 -இல் டிஏ 4% அதிகரிக்கப்பட்டது.
அகவிலைப்படி குறித்து, துறை அதிகாரிகள், "அகவிலைப்படி அரசு ஊழியர்களின் கொடுப்பனவுகளை மேம்படுத்துவதோடு அவர்களின் நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் தரவுகளின் அடிப்படையில், இது திருத்தப்படும்" என கூறினார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் படி பார்த்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால், இப்போது 50% ஆக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உயரும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரம் இதுதான்: 7வது ஊதியக்குழு அகவிலைப்படி சதவிகிதம் = [{AICPI-IW (அடிப்படை ஆண்டு 2001=100) -இன் கடந்த 12 மாதங்களின் சராசரி – 261.42}/261.42×100]
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.