8th Pay Commission: 8வது ஊதியக்குழு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும்போது 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக மாற்றப்படும் என கூறப்படுகின்றது. தற்போது 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அடிப்படை சம்பளம் கணக்கிடப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் இதை 3.68 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால், அவ்வாறு நடக்காமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆகவே நிர்ணயிக்கப்பட்டது. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களுக்கு 92% ஊதிய உயர்வு இருக்கும்.
8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கடந்த பல நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சமீபத்திய சில நாட்களில் இது குறித்த சில முக்கிய புதுப்பிப்புகள் வந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதுவில் காணலாம்.
சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) 7வது ஊதியக்குழுவின் கீழ், ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) அறிவிக்கப்பட்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3% அதிகரிக்கப்பட்டு மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 53% ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தற்போது 8வது ஊதியக்குழு பற்றிய பேச்சுகள் அதிகமாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8 வது ஊதியக் குழுவின் செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சம்பள கமிஷன் கொண்டு வரப்படுகிறது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில், அடுத்த ஊதுயக்குழுவான 8வது ஊதியக்குழு 2026 -இல் அமலுக்கு வரவேண்டும்.
8வது ஊதியக்குழு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்ய்யப்படும்போது 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
புதிய சம்பள கமிஷன் வந்த பின்னர், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இரண்டிலும் நல்ல ஏற்றம் இருக்கும். பணவீக்கம் மற்றும் பிற பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
8வது ஊதியக்குழுவில் அடிப்படி ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போது 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அடிப்படை சம்பளம் கணக்கிடப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் இதை 3.68 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால், அவ்வாறு நடக்காமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆகவே நிர்ணயிக்கப்பட்டது.
சம்பள உயர்வு: 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூயடும். அதாவது ஊழியர்களுக்கு 92% ஊதிய உயர்வு இருக்கும்.
ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக உயரக்கூடும். இது பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் குறித்து அடுத்த மாதம் சில முக்கிய தெளிவான புதுப்பித்தல்களை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. அடுத்த மாதம், அதாவது நவம்பரில் ஒரு முக்கிய கூட்டம் நடக்கவுள்ளது. NC-JCM இன் செயலாளர் (ஊழியர்கள் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு அடுத்த மாதக் கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
8வது ஊதியக்குழு பற்றிய கோரிக்கை நிச்சயமாக இந்த கூட்டத்தில் எழுப்பப்படும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (JCM) ஏற்கனவே, ஊதியக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இரண்டு குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.