8th Pay Commission: எமக்கு கிடைத்த தகவல்களின் படி, 8வ்து ஊதியக் குழுவை அரசு அமல்படுத்துவதற்கான வரைவு 2026 ஜனவரி 1ம் தேதிக்குள் தயாராகிவிடும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்ட போது, அடிப்படை ஊதியத்தை (Basic Salary) நிர்ணயிக்கும் ஃபொட்மெண்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரியிருந்தன. ஆனால், அந்த நேரத்தில் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரையே நிர்ணயித்தது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வரக்கூடும் என நம்பப்படுகின்றது. அப்படி நடந்தால், அதில் அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரை (Fitment Factor) 3.68 ஆக உயர்த்தலாம் என்று கூறப்பட்டுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவின் அறிவிப்புக்காக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஊழியர் சங்கங்கள் அடுத்த ஊதியக்குழுவிற்கான கோரிக்கையை தொடர்ந்து அரசிடம் வைத்து வருகின்றன. இந்த நிலையில் 8வது ஊதியக்குழு குறித்த சமீபத்திய அப்டேட், இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எமக்கு கிடைத்த தகவல்களின் படி, 8வ்து ஊதியக் குழுவை அரசு அமல்படுத்துவதற்கான வரைவு 2026 ஜனவரி 1ம் தேதிக்குள் தயாராகிவிடும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக்குழுவில் பல மாற்றங்கள் வரக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த கணக்கில் பார்த்தால் 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேணுடும்.
புதிய ஊதியக் குழு: ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலுக்கு கொண்டுவர 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் இப்போதே அதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கினால்தான் 2026 ஆம் ஆண்டு அதை அமல்படுத்த முடியும். இதற்காகத்தான் ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனினும், இது குறித்து அரசு இதுவரை எதுவும் கூறவில்லை.
ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் ஊதிய அமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும். அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள் (Allowances) என அனைத்திலும் நல்ல ஏற்றம் காணப்படும். ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்திலும் அதிகரிப்பு இருக்கும்.
ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்ட போது, அடிப்படை ஊதியத்தை (Basic Salary) நிர்ணயிக்கும் ஃபொட்மெண்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரியிருந்தன. ஆனால், அந்த நேரத்தில் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரையே நிர்ணயித்தது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது, ஏழாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில், மாதம் ரூ.18,000 ஆனது. குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆகவும் அதிகரித்தது.
2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வரக்கூடும் என நம்பப்படுகின்றது. அப்படி நடந்தால், அதில் அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரை (Fitment Factor) 3.68 ஆக உயர்த்தலாம் என்று கூறப்பட்டுகிறது.
இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் தற்போதைய ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும். இது தவிர, அதிகபட்ச சம்பளமும் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக உயரும்.
8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், பிற கொடுப்பனவுகளிலும் (Allowances) மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணத்தை அளிக்கும். இதனால் ஊழியர்களுக்கு அதிக அளவு சம்பள உயர்வு கிடைக்க வயப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.