8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் அளித்துள்ள கோரிக்கைகளில் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் மற்றும் செயலாக்கம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பின், ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஆகையால் நீண்ட நாட்களாக ஊழியர்கள் இதை கோரி வருகிறார்கள். 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் ஊதிய முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கக்கூடும். அடிப்படை ஊதியம், அலவன்ஸ்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை ஊதியக் குழு மறுஆய்வு செய்யலாம். இதன் காரணமாக கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது.
இன்னும் சில நாட்களில், அதாவது ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செயவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன் சமர்ப்பித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர் சங்கம் அமைச்சரவை செயலாளருக்கு முன்மொழிவை அனுப்பியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அளித்துள்ள கோரிக்கைகளில் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் மற்றும் செயலாக்கம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பின், ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஆகையால் நீண்ட நாட்களாக ஊழியர்கள் இதை கோரி வருகிறார்கள்.
2024 பட்ஜெட்டுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன்வைத்துள்ளது. இது தவிர, 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான பரிந்துரையும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என கூறப்படுகின்றது.
8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் ஊதிய முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கக்கூடும். அடிப்படை ஊதியம், அலவன்ஸ்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை ஊதியக் குழு மறுஆய்வு செய்யலாம். இதன் காரணமாக கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில், மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி, அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் ஊழியர்களின் தற்போதைய நிலையும், அடுத்த ஊதியக்குழுவிற்கான தெவையை பற்றியும் விளக்கமாக கூறப்படுள்ளது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. புதிய ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய சம்பள அமைப்பு, அலவன்ஸ்கள் மற்றும் சலுகைகளை செக் செய்து, பணவீக்கம், விலைவாசி போன்ற அம்சங்களின் அடிப்படையில், தேவையான மாற்றங்களை அரசுக்கு பரிந்துரைக்கிறது.
7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 28 பிப்ரவரி 2014 அன்று 7வது ஊதியக்குழுவை கொண்டு வந்தார். அதன் பரிந்துரைகள் 1 ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தன. இப்போது 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய ஊதியக் குழு அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 50% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெற்று வருகிறார்கள். ஜூலை 2024 முதல் டிஏ 4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 54% ஆக அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.