8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம், தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் அதிகரித்து ரூ.51,480 ஆக உயரும் என ​​பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் மட்டுமல்லாமல் ஓய்வூதியத்திலும் ஏற்றம் ஏற்படும். 8 ஆவது ஊதியக் குழுவின் கீழ், ஓய்வூதியமும், தற்போதைய ஓய்வூதியமான ரூ.9,000 உடன் ஒப்பிடும்போது, 186 சதவீதம் அதிகரித்து ரூ.25,740 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரால் எதிர்பார்க்கப்படும் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு அரசு ஒப்புதல் அளித்தால் இந்த கணக்கீடுகள் உண்மையாகும்.

1 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பல வித முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது 8வது ஊதியக்குழுவின் அறிவிப்பு. இதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.

2 /11

8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அடிப்படை என்ன? இதற்கான கணக்கீடு என்ன? இந்த பதிவில் காணலாம்.

3 /11

7வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. 6வது ஊதியக் குழுவில் இது 7,000 ரூபாயாக இருந்தது.

4 /11

JCM எனப்படும் கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் ( Joint Consultative Machinery) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, அடுத்த ஊதியக்குழுவின் தான் குறைந்தபட்சமாக 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டரை எதிர்பார்ப்பதாக கூறினார். 7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டருடன் ஒப்பிடுகையில் இது 29 அடிப்படைப் புள்ளிகள் (bps) அதிகமாகும்.  

5 /11

சம்பள உயர்வு: 8வது ஊதியக்குழுவில் 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம், தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் அதிகரித்து ரூ.51,480 ஆக உயரும் என ​​பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 /11

ஃபிட்மென்ட் ஃபாக்டரை மேலும் உயர்த்துவது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்திற்கு வழிவகுக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ஏற்படும் அதிகரிப்பு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் என இரண்டையும் உயர்த்துகிறது.

7 /11

சம்பளம் மட்டுமல்லாமல் ஓய்வூதியத்திலும் ஏற்றம் ஏற்படும். 8 ஆவது ஊதியக் குழுவின் கீழ், ஓய்வூதியமும், தற்போதைய ஓய்வூதியமான ரூ.9,000 உடன் ஒப்பிடும்போது, 186 சதவீதம் அதிகரித்து ரூ.25,740 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரால் எதிர்பார்க்கப்படும் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு அரசு ஒப்புதல் அளித்தால் இந்த கணக்கீடுகள் உண்மையாகும்.

8 /11

புதிய ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை  என்றாலும், அடுத்த பட்ஜெட் 2025 -இல், அதாவது பிப்ரவரியில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட்ட 2024-25 பட்ஜெட்டிலும் இதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டன, ஊழியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளுடன் அமைச்சரவை செயலாளர் மற்றும் நிதி அமைச்சகத்தை அணுகின என்பது குறிப்பிடத்தக்கது.

9 /11

டிசம்பர் மாதம் கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ளது. அதன் பின்னர் 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டம் இந்த மாதம் நடைபெறும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இது டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10 /11

பொதுவாக புதிய ஊதியக்குழுகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான ஏற்றத்திற்கு வழிவகுத்த 7வது ஊதியக் குழு, பிப்ரவரி 2014 இல் உருவாக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. முக்கிய பரிந்துரைகளின் படி, குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.