Railway Station Turned As Hotel: பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அரகோன் பள்ளத்தாக்கில் ஆழமாக மறைந்திருக்கும் கட்டிடக்கலை அற்புதத்தை வெளிகொண்டு வந்திருக்கிறது இந்த புது முயற்சி.
புழக்கத்தில் இல்லாமல் கைவிடப்பட்ட கான்ஃபிராங்க் ரயில் நிலையம், தற்போது உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களை வரவேற்க ஒரு ஆடம்பரமான ஹோட்டலாக புதிய பரிணாமத்தில் ஜொலிக்கிறது.
ஹோட்டல் மற்றும் அதன் வரலாறு: 1928 ஆம் ஆண்டில், கான்ஃப்ராங்க் ரயில் நிலையம் ஒரு ரயில் மையமாக திறக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் தொடக்க விழாவில் பிரெஞ்சு குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஸ்பெயின் மன்னர் இருவரும் கலந்து கொண்டனர்
இந்த நிலையம், இன்று ஹோட்டலாக மாறியுள்ளது, இரண்டாம் உலகப் போரின் போது உளவு பார்த்தல், தங்கம் கடத்தல் மற்றும் கைதுகளுக்கு சாட்சியாக இருந்த ரயில் நிலையம் இது.
பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட கட்டிடம்
கைவிடப்பட்ட ரயில் நிலையத்தை பார்சிலோ ஹோட்டல் குழுமம் ஆடம்பர ஹோட்டலாக மாற்இயுள்ளது
யாரும் அறியா ரயில் நிலையமாக இருந்த கான்ஃப்ராங் ரயில் நிலையத்தின் புதிய தோற்றம் மனம் மயக்குகிறது
பல வருடங்களாக மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்தன.
கான்ஃப்ராங்க் நிலையம் ஜனவரி 2023 முதல் ஹோட்டலாக இயங்கத் தொடங்கிவிட்டது