மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு.. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது..!
ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. ரஜினி தலைமையில் 2 மணி நேரம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் நிலைபாடு குறித்து முக்கிய முடிவை ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களுடன் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பெயரில் வெளியான பரபரப்பு அறிக்கை தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது. அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.
கொரோனா அச்சத்திற்க்கு மத்தியில், கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. இதனைதொடர்ந்து, சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து, 234 சட்டசபை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதா என்பது குறித்தும், தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், தேர்தல் பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சியை எவ்வாறு மக்களிடம் முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. ரஜினி தலைமையில் 2 மணி நேரம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் நிலைபாடு குறித்து முக்கிய முடிவை ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.