கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ வைத்த செக்! இனி ஒன்றும் செய்ய முடியாது!

கெளதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு எதிராகை ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
1 /6

இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.    

2 /6

இந்த டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் செயல்பாடுகளும் பிசிசிஐயின் சோதனையில் இடம் பெற்றுள்ளது. இதனால் தற்போது சிக்கலில் உள்ளார்.  

3 /6

ஜூலை மாதம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தார். அதன் பிறகு தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளார்.   

4 /6

கம்பீரின் எதிர்காலம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை பொறுத்து அமையும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அந்த தொடரையும் இழந்தால் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.  

5 /6

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்த தொடர் மிகவும் முக்கியம்.  

6 /6

தற்போது WTC புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது இந்தியா. இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், கம்பீரின் அதிகாரம் கட்டுப்படுத்தலாம் அல்லது அவர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.