வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை!! யார் தெரியுமா?

Actress First Choice To Play In Vaaranam Aayiram : சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சமீரா ரெட்டிக்கு பதிலாக நடிக்க இருந்தவர், யார் தெரியுமா?

Actress First Choice To Play In Vaaranam Aayiram : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008ஆம் ஆண்டு வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சமீர ரெட்டி மற்றும் ரம்யா அகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில், இதில் சமீராவிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. 

1 /7

2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படம், அப்போது பெரிய ஹிட் அடித்த கௌதம் வாசுதேவ் மேனனின் படமாகும். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடிகளாக சமீரா ரெட்டி மற்றும் ரம்யா ஆகியோர் நடித்திருந்தனர். 

2 /7

எப்போது பார்த்தாலும், ஃப்ரெஷ்ஷாக இருக்கும் இந்த படம் அவ்வப்போது ரீ-ரிலீஸிலும் வெற்றி பெறுவதுண்டு. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

3 /7

வாரணம் ஆயிரம் படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில் அவர், இந்த கதை உருவான விதம் குறித்து கூறியிருக்கிறார். 

4 /7

வாரணம் ஆயிரம் படத்தின் கதை, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் சில காட்சிகளை வைத்து எழுதப்பட்டதாக கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார். இதில் சூர்யாவும் அசினும் நடித்திருந்தனர். 

5 /7

சென்னையில் ஒரு மழைக்காலம் படம், டிராப் ஆகி விட்டது. இந்த படத்தில் ஒரு ரயில் சீன் வருமாம். அதை வைத்துதான் வாரணம் ஆயிரம் ரயில் காட்சியும் எழுதப்பட்டுள்ளது. 

6 /7

அசின் சம்மதித்திருந்தால், சமீராவிற்கு பதிலாக வாரணம் ஆயிரம் படத்தில் அவர் நடித்திருகலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

7 /7

கௌதம் மேனன் கூறிய இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.