மகளிர் தினத்தை பெண் பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்!

Sakshi Agarwal Women's Day Celebration : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கும் சாக்‌ஷி அகர்வால், பெண் பத்திரிக்கையாளர்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடியிருக்கிறார். 

1 /7

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாக்‌ஷி அகர்வால். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் இவர். 

2 /7

இவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது, பிக்பாஸ் நிகழ்ச்சிதான். 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் முக்கிய போட்டியாளராக இருந்தார். 

3 /7

49 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த இவர், அதன் பிறகு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. 

4 /7

2018ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ படத்தில் சாக்‌ஷி, ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்திருப்பார். 

5 /7

மார்ச் 8ஆம் தேதியான நாளை, உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில், சாக்‌ஷி ஸ்பெஷலாக ஒரு காரியத்தை செய்துள்ளார். 

6 /7

சாக்‌ஷி அகர்வால், சினிமா பெண் பத்திரிக்கையாளர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுக்கு பிடித்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வைத்திருக்கிறார். 

7 /7

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.