மத்திய அரசு ஊழியருக்கு 1947இல் சம்பளம் எவ்வளவு? முதல் ஊதியக்குழு டூ 8வது ஊதியக்குழு வரை - ஒரு பார்வை

Pay Commissions History: சமீபத்தில் 8வது ஊதியக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இதற்கு முன் இருந்த முதல் 7 ஊதியக்குழுக்கள் ஆகியவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கடந்த வாரம் 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் அரசு ஊழியர்களின் அடிப்படை மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியம் ஆகியவை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.18 ஆயிரம் 2026ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

1 /8

8வது ஊதியக்குழு: வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் இது அமலுக்கு வரும். இது அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.51 ஆயிரம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியமும் பன்மடங்கு உயரும். இருப்பினும் இதில் அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகள் இருக்காது என கூறப்படுகிறது.   

2 /8

7வது ஊதியக்குழு: இதுதான் 2016ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.18 ஆயிரம் ஆகும். வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன்மூலம், ஓய்வூதியக்காரர்களுக்கு பல நன்மைகள் வந்தன.   

3 /8

6வது ஊதியக்குழு: 2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இது அமலில் இருந்தது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.7 ஆயிரம் ஆகும்.  

4 /8

5வது ஊதியக்குழு: 1997ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இது அமலில் இருந்தது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்டை வருமானம் ரூ.2,550 ஆகும். இதில்தான் 50% அகவிலைப்படி அடிப்படை வருமானத்துடன் இணைக்கப்பட்டது.

5 /8

4வது ஊதியக்குழு: 1983ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை இது அமலில் இருந்தது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.750 ஆகும்.  

6 /8

3வது ஊதியக்குழு: 1970ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இது அமலில் இருந்தது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.185 ஆகும்.  

7 /8

2வது ஊதியக்குழு: 1959ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இது அமலில் இருந்தது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.80 ஆகும்.  

8 /8

முதலாவது ஊதியக்குழு: சுதந்திர பெற்ற 1947ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை இது அமலில் இருந்தது. இதன்கீழ் குறைந்தபட்ச மாத அடிப்படை வருமானம் ரூ.55 ஆகும்.