விரைவில் மீண்டு வருவீர்கள் சமந்தா...!

நடிகை சமந்தா அரிய நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தமிழ், தெலுங்கில் இரண்டு சிறப்பு பேட்டிகளை கொடுத்துள்ளார். பேட்டியின்போது, அவர் தனது உடல்நிலை குறித்து மிகவும் உருக்கமாக பேசியதும், கண்ணீர் வடித்ததும் பலரின் மனதையும் கலங்கச் செய்தது. இந்நிலையில், அவர் நேற்று இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை இங்கு காணலாம். 

  • Nov 08, 2022, 23:17 PM IST
1 /3

எப்போதும் எனது நண்பர் ஒன்று சொல்வார். ஒருநாள் எவ்வளவு மோசமாக அமைந்தாலும், அதை துடைத்து எறிந்துவிட்டு அடுத்த நாளுக்கு செல்ல வேண்டும் என்பார். அதை இன்று ஒருநாள் கடனாக பெற்றுக்கொள்கிறேன் என தனது நேற்றைய இன்ஸ்டாகிராமில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.    

2 /3

மயோசிடிஸ் என்ற அரிய நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா சில நாள்களுக்கு முன் அறிவித்தார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வும், தசை வலியும் அதிகமிருக்கும் என கூறப்படுகிறது. 

3 /3

இந்த நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைய சற்று காலமெடுக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ அவர்கள் சோர்வாகி அடிக்கடி மயக்கமிடவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.