அலை பாயுதே மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் மீண்டும் சந்தித்த போட்டோஸ் ஷாலினி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது தற்போது அலை பாயுதே படத்தினை நினைவுப்படுத்துகிறது. மேலும் படிப்போம்.
அலை பாயுதே மீண்டும் மாதவன் மற்றும் ஷாலினி இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தொடங்கினார். தன்னுடைய முதல் போட்டோஸ் அஜித்துடன் ஷாலினி இருக்குமாறு பதிவிட்டிருந்தார். இது ரசிகர்கள் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஷாலினி இன்ஸ்டா பக்கம்தானா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. மேலும் படிப்போம்.
அலை பாயுதே மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான முழு காதல் நிறைந்த படம். இந்தப்படம் மாதவன் ஷாலினிக்கு சூப்பர் ஜோடியாக செட் ஆகிவிட்டது.
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான ‘சிநேகிதனே சிநேகிதனே, பச்சை நிறமே, யாரோ யாரோடி’ ஆகிய பாடல்கள் இந்த படத்தில் அன்றும் இன்றும் ஹிட்..
மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் அலை பாயுதே படத்தில் காதலிப்பதைப் பார்பதற்கு ஆசையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
பேபி ஷாலினி மற்றும் மாதவன் இருவரும் 2000 யில் வெளியான அலை பாயுதே படத்தில் மட்டும் தான் ஒன்றாக நடித்திருக்கிறார்.
ஒரே படத்தில் ஜோடியாக நடித்து ஒரே ஜோடியாக ஹிட் ஆனது மாதவன் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படம் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஷாலினி சமீபத்தில் இன்ஸ்டாபக்கம் ஆரம்பித்தபோது இதுப் போலி கணக்கு என பலரும் கூறினர். அதன்பிறகு தொடர்ந்து ஷாலினி தனது இன்ஸ்டாவில் அஜித்துடன் இருக்கும் போட்டோஸ் பகிர்ந்து வந்தார்.
ஷாலினி, அஜித் கார் வீடியோ மற்றும் பைக் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டதால் ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர். ஷாலினி, அஜித் மற்றும் இவரின் இளைய மகன் விளையாடும் வீடியோ மற்றும் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டார்.
ஷாலினி மூத்த மகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்லும்போது அங்கு அஜித்துடன் இருக்கும் போட்டோஸ் பகிர்ந்து அஜித் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார்.