Heart Amazing Facts | இதயம் குறித்து நமக்கு தெரியாத உண்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Heart Amazing Facts Tamil | கருவில் இதயத்துடிப்பை வைத்தே குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதயத்தின் வேலை கருவிலிருந்து தொடங்குகிறது. காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளின் குறியீடாகவும் இதயம் இருக்கிறது.
உடலில் எத்தனையோ உள்ளுறுப்புகள் இருந்தாலும் இதயம் தனித்துவமானதாகும். உங்கள் இதயம் இரத்தத்தை பம்ப் செய்து உங்கள் உடல் முழுவதும் கொண்டு சென்று உங்கள் இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இதயம் துடிப்பது நின்று விட்டால் ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் முடிவு செய்கின்றனர். அதேநேரம், மூளை செயல்படுவதை நிறுத்திக் கொண்டால் ஒருவர் உயிருடன்தான் இருப்பார். அவரை கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் 1,00,000 முறை இதயம் துடிக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் 3.78 லிட்டர் இரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது. ஒரு நாளைக்கு 7570 லிட்டர் இரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது.
இரத்தத்தை சீராக உடல் முழுவதும் எடுத்துச் செல்லவும், ஊட்டச்சத்துக்களை பிற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் இதயம் உதவுகிறது. நமது உடலில் 60,000 மைல்கள் கொண்ட இரத்த நாளங்கள் உள்ளன. அதாவது இந்த உலகத்தை இரு முறை வலம் வரக் கூடிய தொலைவு.
சராசரியாக ஒரு மனிதனின் இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். இதயம் பெண்களுக்கு சராசரியாக 250 – 300 கிராமும், ஆண்களில் 300 – 350 கிராமும் எடை கொண்டிருக்கும்.
பெண்ணுக்கு ஆணைக் காட்டிலும் நிமிடத்துக்கு 8 துடிப்புகள் அதிகமாக இருக்கும். பெரியவர்களின் இதயம் இரு கைகளையும் தட்டுவதற்காக ஒன்று சேர்க்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும். குழந்தையின் இதயம் நமது கையை மூடினால் வரும் அளவு இருக்கும்.
விழியைத் தவிர பிற உறுப்புகள் அனைத்துக்கும் இதயத்தில் இருந்துதான் இரத்தம் கொண்டு செல்லப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் இதயம் அளிக்கும் ஆற்றலைக் கொண்டு நிலவுக்கு ஒரு வாகனத்தில் சென்று திரும்ப வந்துவிட முடியும்.
இதயம் என்பது இடது பக்கம் இருக்காது. இதயம் நுரையீரல்களுக்கு நடுவில் மார்புக்கு மத்தியில் தான் இருக்கும். இதயத்தில் எலெக்ட்ரிக்கல் அமைப்பு இருக்கும். அதாவது நமது வீட்டில் ஒயரிங் செய்யப்பட்டிருப்பது போன்று என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த எலெக்ட்ரிக்கல் அமைப்பு அளிக்கும் சிக்னல்களை கொண்டே இதயம் துடிக்கிறது.