ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக பெருக்கி ரத்த சோகையை விரட்டும் கீரை!

இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமான ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம். இது உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, ஆண்களுக்கு 14 – 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது. சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.

1 /5

இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாததால் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் போதுமான அளவில் கிடைக்காத ஒரு நிலை ஆகும். நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, ரத்த அணுக்கள் குறைவதால், ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இதனால், நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல், இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.

2 /5

இரத்த சோகை என்ற நோய் பல நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுவதோடு, நமக்கு அதிக அளவிலான சோர்வை கொடுத்து, நமது இயல்பான வாழ்க்கைக்கு பெரிய தடைக் கல்லாக மாறி விடும் சாத்தியம் உண்டு. சில காய்கறிகள் சாப்பிட்டால், உடலில் ரத்த சோகை என்பதே ஏற்படாது. 

3 /5

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. உடலில் இரும்புச்சத்து இல்லாதவர்கள் அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4 /5

கீரையை உட்கொள்வதால், இரத்த சோகை நீங்குவதோடு, இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

5 /5

சர்க்கரை நோயாளிகளுக்கு கீரை ஒரு வரப்பிரசாதம். அதாவது, இதை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.