உணர்ச்சிவசப்படுவது மனித இயல்பு. என்றாலும், அதீதமான எதுவும் நன்மை பயக்காது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவது நல்லதல்ல, ஜோதிடத்தில், சில ராசிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படுவதால், வெற்றி வாய்ப்புகளை இழக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
பலரும் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்ள இயலாமல், உணர்ச்சி வசப்படுகின்றனர். அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் ஆபத்தானது. நீங்கள் தேவையற்ற விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுபவராக இருந்தால், அதனால் வேலைகளை சரியாக செய்து முடிக்க முடியாமல் போகலாம். அது மட்டுமின்றி நீங்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு, செயல்படுகையில் அது வெற்றிக்கான பெரும் இடையூறாக இருக்கலாம்.
மீன ராசிக்காரர்களும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இந்த பொய்யையும் வஞ்சகத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, யாராவது ஏமாற்றினால், அதையே நினைத்து விரக்தியில் மூழ்கி, அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் தனமை கொண்டட்வர்களாக இருக்கிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். மற்றவர்களை நேசிப்பதிலும், அக்கறை கொள்வதிலும் அவர்களுக்கு ஈடு இணை இல்லை. அதுமட்டுமின்றி பிறர் வலியை நினைத்து அவர்கள் கண்ணீர் விடுவது சகஜம். இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் சரி எது, தவறு எது என வேறுபடுத்த முடியாமல் சுயநலவாதிகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அவர்களை யார் வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்றலாம்.
ரிஷபம் ராசிக்காரர்கள் புத்திசாலிகள் என்றாலும், எளிதில் உணர்ச்சிவசப்படுவதால், சில சமயங்களில் அவர்கள் வெற்றி வாய்ப்பினை இழக்கிறார்கள். மனம் திறந்து பழகும் இவர்களுக்கு சில சமயங்களில் நியாயமான பதில் கிடைக்காத போது விரக்தியடைகிறார்கள். அதைப் பற்றியே சிந்தித்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்களால் பொய், பாசாங்கு, ஏமாற்றுதல் போன்றவற்றை சகித்துக்கொள்ள முடியாது. அநியாயத்தை கண்டால் கொதித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் எளிதல் ஏமாற்றப்பட்டு மனதளவில் காயமடைகின்றனர்.