டைப்-சி சார்ஜிரை பயன்படுத்தறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்..!!

Type-C Charger: ஸ்மார்ட்போன்களுக்கு தனி சார்ஜரை எடுத்துச் செல்ல வேண்டிய காலம் போய் விட்டது. ஏனென்றால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன.

பெரும்பாலான போன்களும் டைப் சி சார்ஜருடன் வருவதால், இன்றைய மாறிவிட்ட சூழலில் மொபைல் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லாத நிலை உள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட்டை மத்திய அரசு கட்டாயமாக்கப் போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

1 /8

டைப்-சி சார்ஜிங் போர்ட் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றை பயன்படுத்தும் போது செய்யும் சில தவறுகள் உங்கள் ஸ்மார்ட்போனை சேதப்படுத்தலாம். எனவே சில தவறுகளை செய்யாமல் கவனமாக இருப்பது முக்கியம்.

2 /8

டைப்-சி சார்ஜிங் போர்ட்  பயன்படுத்துவதால் பல  நன்மைகள் உள்ளது. இதனால் தான் டைப்-சி சார்ஜிங் போர்ட்டை மத்திய அரசு கட்டாயமாக்க திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3 /8

மொபைல் பயனர்கள் தங்கள் சார்ஜர் அடாப்டர் மூலம் எத்தனை வாட்ஸ் சார்ஜ் ஆகும் என்பதை அறிந்திருக்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு ஏற்ற சார்ஜிங் அடாப்டரை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும். 

4 /8

சந்தையில் இரண்டு வகையான டைப்-சி சார்ஜிங் கேபிள்கள் உள்ளன. ஒன்று USB Type-C to Type-C சார்ஜிங் கேபிள். மற்றொன்று USB Type-A முதல் USB Type C கேபிள்.  இந்த இரண்டு வகை கேபிள்களின் சார்ஜிங் பொறிமுறையும் வேறுபட்டதாக இருக்கும். 

5 /8

பெரும்பாலான பயனர்கள் சார்ஜ் செய்யும் போது டைப்-சி சார்ஜிங் கேபிள் வகைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை, இதன் காரணமாக ஸ்மார்ட்போன் சேதமடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

6 /8

சந்தையில் பாஸ்ட் சார்ஜர்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட அடாப்டர்கள் வெவ்வேறு வாட் பவர் அவுட்புட்டைக் கொண்டுள்ளன. சில சார்ஜர்கள் 44W, 65W, என்ற பவர் அவுட் புட்டையும் சில சார்ஜிங் அடாப்டர்கள் 100W மற்றும் 120W என்ற பவர் அவுட் புட்டையும். தவறான அடாப்டரை பயன்படுத்தினால், போன் சேதமடையும்.

7 /8

டைப் சி சார்ஜரை சுத்தம் செய்வதில் சிக்கல் உள்ளது. அதாவது எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அதில் அழுக்கு எளிதாக நிரம்பி விடும். இதன் காரணமாக சில நேரங்களில் சார்ஜ் செய்வதில் சிக்கல் ஏற்படும்.  

8 /8

ரயில் நிலையம் அல்லது பொது இடங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான சொந்த சார்ஜரை உங்களுடன் எடுத்துச் செல்வது நல்லது. மேலும் பொது இடங்களில் சார்ஜிங்கை பயன்படுத்துவது பாதுகாப்பும் இல்லை.