Benefits Of Guava Leaves: கொய்யாப்பழத்தை காட்டிலும் கொய்யா இலையை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
கொய்யாப்பழம் உடலுக்கு எவ்வளவு நல்லதோ அதைவிட கொய்யா இலைகள் (Guava Leaves) அதிக நன்மைகளை தரவல்லது. ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது முதல் செரிமானத்தை சீராக்குவது வரை பல்வேறு நன்மைகள் அதில் உள்ளன. இதுகுறித்து பெரும்பாலனோருக்கு தெரிந்திருக்காது என்பதால் இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் உடல்நலனுக்கு நல்லது என சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்திருப்பீர்கள்... ஆனால், கொய்யா இலையின் நன்மைகள் குறித்து உங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
கொய்யாப்பழத்தை சாப்பிடுவதை காட்டிலும் கொய்யா இலையில் (Guava Leaves) உடல்நலனுக்கு கூடுதல் நன்மைகள் இருக்கின்றன. ஆண்டிஆக்ஸிடன்ட், ஃபைபர் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் கொய்யா இலையில் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் கொய்யா இலையை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
புற்றுநோய் ஆபத்து குறையும்: கொய்யா இலையில் அதிக ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை (Free Radicals) நீர்த்துப்போகச்செய்யும். எனவே, தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் வளரும் ஆபாயம் குறையும்.
செரிமானத்திற்கு நல்லது: இதில் பாக்டீரியாக்களை கொல்லும் பண்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே இது குடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி ஃபைபர் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். ஒட்டுமொத்தமாக செரிமானம் (Digestion) சீராக இருக்கும்.
மனநிலையையும் சீராக்கும்: கொய்யா இலையில் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் நிறைந்திருக்கின்றன. அதாவது இதை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தம், பதற்றகம் நீங்கும். இதன்மூலம் மனநலமும் சீராக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்: இதில் வைட்டமிண் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கொய்யா இலையில் இருப்பதால், இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தொற்றுகள் மற்றும் நோய்களிடம் இருந்து உங்கள் உடலை காக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகும்.
ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும்: கொய்யா இலை வீட்டு வைத்தியங்களில் அடிப்படையாகவே ரத்த சர்க்கரை அளவை சீராக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உங்கள் ரத்தத்தில் குலுகோஸ் அளவை சீராக வைத்து, சாப்பாட்டுக்கு பின்னான ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் உங்களின் புரிதலுக்காக எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன்னர் நீங்கள் நிச்சயம் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இவற்றை Zee News உறுதிசெய்யவில்லை.