India vs Bangladesh 3rd T20: வங்கேதசம் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் நாளை (அக். 12) செய்ய உள்ள நான்கு பெரிய மாற்றங்களை இங்கு காணலாம்.
வங்கதேச அணிக்கு (Team Bangladesh) எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்று வைட் வாஷ் செய்த இந்திய அணி (Team India), டி20 தொடரையும் முழுமையாக வைட் வாஷ் செய்ய காத்திருக்கிறது. நாளைய போட்டியில் வெற்றி பெறுவது ஒருபுறம் இருந்தாலும் ஸ்குவாடில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறனை சோதிக்கும் விதமாக நாளைய போட்டியின் பிளேயிங் லெவனில் நான்கு முக்கிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
வங்கதேசம் அணி (Team Bangladesh) 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வைட் வாஷ் செய்து அதிரடி காட்டியது.
தொடர்ந்து, டி20 தொடரிலும் இந்திய அணி (Team India) தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. குவாலியர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடியது.
தொடர்ந்து, இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு (IND vs BAN 3rd T20) இடையிலான கடைசி டி20 போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (அக். 12) நடைபெறுகிறது. இந்த போட்டி சம்பிரதாயமானது என்றாலும், இதிலும் வென்று டெஸ்ட் தொடரை போல் டி20 தொடரையும் வைட் வாஷ் செய்ய இந்திய அணி காத்திருக்கிறது.
போட்டியை வெல்வது ஒருபுறம் இருந்தாலும், டி20 ஸ்குவாடில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் இந்திய அணி குறியாக உள்ளது.
எனவே நாளைய கடைசி போட்டியில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம். முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி தயாராகி வருகிறது. பிளேயிங் லெவனில் (IND vs BAN Playing XI Changes) நான்கு மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜித்தேஷ் சர்மா, திலக் வர்மா, ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
இருப்பினும் சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு போட்டியில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கலாம். அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து உள்ளூர் தொடர்களில் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம். ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஹர்ஷித் ராணா, பிஷ்னோய், திலக் வர்மாவுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவது நல்லதுதான்.
இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு): அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நிதிஷ் குமார், ரியான் பராக், ஜித்தேஷ் சர்மா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்