Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல், தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
Sevvai Peyarchi Palangal: தீபாவளிக்கு முன், செவ்வாய் தனது ராசியை மாற்றி பெயர்ச்சி ஆகவுள்ளார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதி ஆவார். அக்டோபர் 20 ஆம் தேதி மதியம் 2:22 மணிக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித சுப பலன்களை அள்ளிக்கொடுக்கும். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம்: செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரத்தின் பலன் காரணமாக, உங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து உதவி கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம். இந்தக் காலக்கட்டத்தில் உங்களால் உங்கள் கருத்துக்களை மற்றவர்களுக்குச் சரியாகச் சொல்ல முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் வசதிகளுக்கு ஒரு போதும் பற்றாக்குறை இருக்காது. மூத்த சகோதரர்கள் மீதான உங்கள் அன்பு வளரும். மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.
கடகம்: செவ்வாய் பெயர்ச்சி காரணமாக அலுவலகம், வீடு மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பும், அமைதியும் இருக்கும். கணவன், மனைவி இடையே உறவு வலுப்பெறும். குழந்தைகளால் மகிழ்சி உண்டாகும்.
சிம்மம்: செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இதன் மூலம் அவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். நிதி நிலை மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பு, வியாபாரம் செய்பவர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் லாபம் காணலாம்.
துலாம்: செவ்வாய் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தரும். உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும். இக்காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அரசுப் பணிகளிலும் லாபம் வரும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தந்தையும் முன்னேற்றம் காண்பார்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தில் சில தடைகளைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில், கடவுள் மீது உங்கள் கவனம் குறைவாக இருக்கும். சுகபோகங்களையும் பெற சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
தனுசு: செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மகிழ்ச்சியை பெற முடியாது. அமைதியின்மை இருக்கலாம்.
மகரம்: செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் வேலையில் உங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதை செய்து காட்டுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சவால்களை முன்வைக்கலாம். நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பிறப்பதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். ஏற்கனவே குழந்தை இருந்தால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
மீனம்: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால், மீன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் அடிப்படையில் கல்வி கற்கும் பலன் கிடைக்கும். குழந்தைகளுடனான உங்கள் உறவு மேம்படும். உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்ள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.