Central Government Pensioners Pension Hike: மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
Central Government Pensioners Pension Hike: 80 முதல் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20% உயர்வை பெறுவார்கள். 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத உயர்வு கிடைக்கும். 90 முதல் 95 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீத உயர்வை பெற தகுதியுடையவர்கள். 95 முதல் 100 வயதுடையவர்கள் 50 சதவீத அதிகரிப்பை பெறுவார்கள். 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீத உயர்வைப் பெறுவார்கள். இது அதிகபட்ச அதிகரிப்பாக பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் 80 வயதைத் தாண்டிய ஓய்வூதியதாரர்களுக்கு, அதாவது, சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியானது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை மத்திய அரசு இனி வழங்கும் என அறிவிக்கப்பட்டது. பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கருணை உதவித்தொகை என்ற பெயரில் மத்திய அரசு கூடுதல் ஓய்வூதியம் வழங்கும்.
80 வயதை எட்டிய மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களி ட்ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த கூடுதல் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.
CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின்படி, 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை நிறைவு செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணைக் கொடுப்பனவு வழங்கப்படும். இது மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும்? இது அவர்களின் வயதிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். வயதின் அடிப்படையில் சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு ஓய்வூதிய உயர்வு, கருணை உதவித்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி இங்கே காணலாம்.
80 முதல் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20% உயர்வை பெறுவார்கள். 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத உயர்வு கிடைக்கும்.
90 முதல் 95 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீத உயர்வு பெற தகுதியுடையவர்கள். 95 முதல் 100 வயதுடையவர்கள் 50 சதவீத அதிகரிப்பை பெறுவார்கள்.
100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீத உயர்வைப் பெறுவார்கள். இது அதிகபட்ச அதிகரிப்பாக பார்க்கப்படுகின்றது.
இந்த கூடுதல் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்? ஓய்வூதியதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டிய முதல் நாள் முதல் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை அமலுக்கு வரும். இது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் அறிவிப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு அதிக வயதாகும் போது அவர்களது வாழ்க்கைச் செலவுகளும் அதிகமாகின்றன. இந்த செலவுகளை நிர்வகிக்க உதவும் வகையில் கூடுதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளும் புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது, இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தாமதமின்றி சரியான பலன்களைப் பெறுவது உறுதி செய்யப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.