புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வேற லெவல் வெற்றி!!

New Year 2023 Career Horoscope: நாம் இன்னும் சில நாட்களில் புத்தாண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளோம். 2023 ஆம் ஆண்டான புத்தாண்டு, யாருக்கு எப்படிப்பட்ட எதிர்காலத்தை கொண்டு வரும் என தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். யாருக்கு இந்த ஆண்டு நல்ல பலன்களை கொண்டுவரவுள்ளது? யாருக்கு இக்கட்டான சூழல்கள் காத்திருக்கின்றன? இது அனைத்தையும் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். 

 

1 /5

புத்தாண்டு நெருங்க நெருங்க, மக்கள் மனதில் வேலை, வியாபாரம், குடும்ப வாழ்க்கை, செல்வம், உறவு, ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.   

2 /5

வருடாந்திர ஜாதகத்தின்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் பணியிடத்தில் நல்ல பெயர், பண வரவு, பதிவி உயர்வு ஆகிய ஏற்றங்கள் இருக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை 2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இந்த பதிவில் காணலாம். 

3 /5

மிதுன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல வகையான ஏற்றங்களை கொண்டு வரும். இந்த ஆண்டில் நீங்கள் உங்கள் இலக்குகளை எட்டுவீர்கள். ஊதிய உயர்வுடன் இந்த ஆண்டு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணி இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி இருக்கும். புதிய பொருட்களுக்கான வணிகத்தை இந்த ஆண்டு துவக்கலாம். கண்டிப்பாக லாபம் வரும். வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

4 /5

2023 ஆம் ஆண்டு வேலை மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை துலா ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும். இந்த ஆண்டிம் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். புதிய ஆண்டில் புதிய வேலை வாய்ப்புகளுக்கான அழைப்புகளையும் பெறுவீர்கள். தற்போது இருக்கும் வேலையிலும் நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயரை பெறுவீர்கள். புதிய இலக்குகளை எட்டுவீர்கள். 

5 /5

2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான ஆண்டாக இருக்கும். புதிய ஆண்டு பல புதிய வெற்றிகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் பல புதிய வாய்ப்புகள் வரக்கூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் மிக நல்ல மதிப்பு கிடைக்கும். அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது உன்னதமான நேரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். லாபம் அதிகரிக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)