இந்த 5 உடல் சைகைகள் மட்டும் செய்யாதீங்க! மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்!

நாம் பேசுவதை விட பல இடங்களில் நம்முடைய உடல் சைகையே நமது எண்ணங்களை வெளிப்படுத்திவிடும், 80% உடல் சைகைகள் மூலம் மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்கிறார்கள்.

 

1 /5

ஒருவர் உங்களிடம் பேசும்போது நீங்கள் உங்கள் முகத்தை தொடுவது அவரது பேச்சில் விருப்பமில்லாததை காட்டுகிறது, இது அவர்களுக்கு உங்கள் மீது மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.  இதன்மூலம் நாம் பதட்டமாக மற்றும் நம்பிக்கை இல்லாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.  

2 /5

ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் சிலர் இரண்டு கைகளையும் இணைத்து பின்னிக்கொள்வார்கள், இது நல்ல சைகை அல்ல.  நீங்கள் நம்பிக்கையற்றவர் போன்றும், கவலையுடன் அல்லது பதட்டத்துடன் இருப்பதாகவும் பிறருக்கு தோன்றும்.  

3 /5

நீங்கள் முதுகுக்கு பின்னால் கைகளை கட்டிக்கொள்வது மற்றவரிடமிருந்து எவ்வித தொடர்பையும் வரவேற்க விரும்பவில்லை என தோன்ற செய்யும்.  இது உங்களுக்கு அதிகாரமிக்கவராக தோன்றலாம் ஆனால் உங்களை தைரியமில்லாதவராக மற்றவர்கள் நினைக்கக்கூடும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்..  

4 /5

ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் நாம் கால்களை குறுக்கே வைத்துக்கொண்டு நிற்பது அவர்களது கருத்துக்களை நாம் கேட்க அவமதிப்பது போன்று தோன்றும்.  

5 /5

ஒருவருடன் நாம் பேசும்போது கண் தொடர்பு கொண்டிருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் பேசுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று அர்த்தம்.  அப்படி நீங்கள் பிறர் பேசுவதை கவனிக்கவில்லையெனில் கண் தொடர்பு கொள்வது, சிரிப்பது, தலையசைத்து போன்றவற்றை செய்யவேண்டாம்.