IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தமுள்ள 25 இடத்திற்கும் வீரர்களை எடுத்துவிட்டது. அந்த வகையில், சிஎஸ்கே யார் யாரை எந்தெந்த தொகையில் எடுத்திருக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 5 வீரர்களை ஏலத்தில் தக்கவைத்துக்கொண்டு, கையில் 1 RTM மற்றும் ரூ.55 கோடியோடு ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு வந்தது. தலைமைப் பயிற்சியாளர் பிளமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் உள்பட சிஎஸ்கே மேசையில் இருந்த அனைவரும் வழக்கம்போல் நிதானமாக எவ்வித பதற்றமும் இன்றி வீரர்களை எடுத்தனர் எனலாம்.
ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), சிவம் தூபே (ரூ.12 கோடி), தோனி (ரூ.4 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட பேட்டர்கள்: டேவான் கான்வே (ரூ.6.25 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.3.4 கோடி), ஷேக் ரஷீத் (ரூ.30 லட்சம்), ஆன்ட்ரே சித்தார்த் (ரூ.30 லட்சம்) விக்கெட் கீப்பர் பேட்டர்: வான்ஷ் பேடி (ரூ.55 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின் (ரூ.9.75 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி - RTM), விஜய் சங்கர் (ரூ.1.2 கோடி- வேகப்பந்துவீச்சாளர்), சாம் கரன் (ரூ.2.4 கோடி - வேகப்பந்துவீச்சாளர்), அன்சுல் கம்போஜ் (ரூ.3.4 கோடி - வேகப்பந்துவீச்சாளர்), தீபக் ஹூடா (ரூ.1.7 கோடி), ராமகிருஷ்ண கோஷ் (ரூ.30 லட்சம்)
ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்: கலீல் அகமது (ரூ.4.80 கோடி), முகேஷ் சௌத்ரி (ரூ.30 கோடி), குர்ஜப்னீத் சிங் (ரூ.2.2 கோடி), கமலேஷ் நாகர்கோட்டி (ரூ.30 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள்: நாதன் எல்லீஸ் (ரூ.2 கோடி), ஜேமி ஓவர்டன் (ரூ.1.5 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர்கள்: நூர் அகமது (ரூ.10 கோடி), ஷ்ரேயஸ் கோபால் (ரூ.30 லட்சம்)
மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடியில், ரூ.65 கோடியை சிஎஸ்கே (Chennai Super Kings) ஏலத்திற்கு முன்னரே பயன்படுத்திவிட்டது. 1 RTM மற்றும் ரூ.55 கோடியுடன் சிஎஸ்கே ஏலத்திற்கு (IPL 2025 Mega Auction) வந்தது.
மொத்தம் 25 வீரர்களையும் சிஎஸ்கே அணி நிரப்பிவிட்டது. ஏலத்தில் மட்டும் செலவிட்டு ரூ.54.95 கோடியை செலவிட்டு ரூ.5 லட்சத்தையும் மிச்சம் வைத்திருக்கிறது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியான வெளிநாட்டு ஆல்-ரவுண்டரை எடுக்காதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.