Actor Jiiva Childhood Photo Viral : நடிகர் ரஜினியுடன் இந்த புகைப்படத்தில் நிற்கும் சிறுவன், இப்போது தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
Actor Jiiva Childhood Photo Viral : ஒரு சில நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாவது உண்டு. அப்படித்தான், ரஜினியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஒரு பிரபல நடிகர் பகிர்ந்து கொள்ள, அது தற்போது நெட்டிசன்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பிரபலம் யார்? இதோ தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ரஜினிகாந்துடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை ஒரு பிரபல நடிகர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நடிகர் யார் என்று தெரிகிறதா?
அவர் வேறு யாருமில்லை, நம்ம ஜீவாதான்! பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான இவர், 1991ஆம் ஆண்டில் இருந்து குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். பெரும் புள்ளி, சேரன் கவுண்டன் போன்ற பாங்களில் இவரை குழந்தை கதாப்பாத்திரமாக பார்த்திருப்போம்.
நடிகர் ஜீவா, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராவார். இவர் திரையிலும் இயல்பு வாழ்க்கையிலும் ஜாலியாக பேசும் குணம் படைத்தவர். குறிப்பாக, சிவா மனசுல சக்தி படத்தில் சிவா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார், வாழ்ந்தே இருப்பார். அந்த அளவிற்கு சிரிப்பு காட்டும் குணாதிசயம் படைத்தவர் இவர்.
ஜீவா நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து கொண்டிருந்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. ஆனால், சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக மக்களின் ஆதரவை பெறாமல் இருக்கிறது.
ஜீவா, சில ஆண்டுகளுக்கு முன்பு சர்கார் வித் ஜீவா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, ஒரு சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் கேமியோ கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
ஜீவா, சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்துடன் எடுத்த தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
ஜீவா-மம்மூட்டி நடிப்பில், தெலுங்கு மொழியில் உருவான ‘யாத்ரா 2’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பினை பெற்றது.