JOHN CENA | கடைசி ராயல் ரம்பல் மேட்சில் ஜான் சீனா அதிர்ச்சி தோல்வி... WWE ரசிகர்கள் ஷாக்

JOHN CENA | WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தன்னுடைய கடைசி ராயல் ரம்பல் மேட்சில் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

JOHN CENA Match | WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா (JOHN CENA) ராயல் ரம்பல் மேட்சில் கடைசியாக விளையாடி தோல்வியடைந்த நிலையிலும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

1 /8

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மல்யுத்த விளையாட்டான WWE நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ஜான் சீனா. 90ஸ் கிட்ஸின் ஆதர்ஷ்ன நாயகன். 47 வயதாகும் இவர் தன்னுடைய கடைசி ராயல் ரம்பல் மேட்சில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இருப்பினும் ரசிகர்களுக்காக ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 /8

ஆம், ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். இந்த அறிவிப்பை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். ஆனால், கடைசியாக ராயல் ரம்பல் மேட்சில் வெற்றி பெற்று மல்யுத்த போட்டிகளின் உட்சபட்ச போட்டியாக கருதப்படும் Wrestle Mania -வில் விளையாடி தன்னுடைய இந்த பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதாக கூறினார். 

3 /8

ஆனால் ஜான் சீனாவின் கடைசி ஆசை நிறைவேறவில்லை. ஏனென்றால் தன்னுடைய மல்யுத்த வாழ்க்கையில் கடைசி ராயல் ரம்பல் மேட்சில் தோல்வியை தழுவினார். இதனால், ஜான் சீனா Wrestle Mania போட்டிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை. இந்த சூழலில் தான் ராயல் ரம்பல் மேட்ச் முடிந்ததும் ஒரு சர்பிரைஸ் அறிவிப்பை வெளியிட்டார் ஜான் சீனா.

4 /8

அடுத்தாக நடக்கும் எலிமினேஷன் சாம்பர் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். அந்த போட்டியில் வெற்றி பெற்று Wrestle Mania-வில் விளையாட விரும்புவதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இந்த முடிவை எடுப்பதே சிறந்தது என எண்ணுகிறேன் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

5 /8

அதன்படி WWE-ல் அடுத்ததாக நடக்கும் எலிமினேஷன் சேம்பரில் விளையாட போகும் ஜான் சீனாவுக்கு, அதுவும் கடைசி எலிமினேஷன் சாம்பர் போட்டியாக இருக்கும். அதன்பிறகு இறுதியாக Wrestle Mania-ல் விளையாடி தன்னுடைய ஒட்டுமொத்த மல்யுத்த போட்டி பயணத்துக்கும் முழுமையாக விடை கொடுக்க உள்ளார். 

6 /8

ஜான் சீனா WWE மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக இருந்தாலும், அவர் இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட போகிறார் என்ற செய்தி ஆறுதலைக் கொடுத்துள்ளது. 

7 /8

எலிமினேஷன் சாம்பர் மற்றும் வெர்ஷ்ல் மேனியா (Wrestle Mania) என்ற இந்த இரண்டு போட்டிகளிலும் ஜான் சீனா விளையாடுவதை பார்க்க ரசிகர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அவருடன் யார் மோதப் போகிறார்கள் என்பது இப்போது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

8 /8

எலிமினேஷன் சாம்பரில் 5 பேருக்கு ஜான் சீனாவுடன் மோத வாய்ப்புள்ளது. தான் ஹங்கேரியில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகவும், அந்த 5 பேரில் யார் என்னுடன் மோதப்போகிறார்கள் என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என அறிவித்துவிட்டு ராயல் ரம்பல் மேட்சுக்கு விடை கொடுத்தார் ஜான் சீனா.