சனி பகவானின் உக்கிரமான அருளால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எப்போதும் பெரிய சிக்கல்கள் நிகழாது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனி மாறுகிறது. சனியின் ஆக்கிரமிக்கப்பட்ட ராசியின் வாழ்க்கையில் கலவையான அனுபவங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சனி பகவான் பல கஷ்டங்களைக் கொடுத்தாலும் அதற்குப் பலமடங்கு மகிழ்ச்சியையும்க் கொடுப்பார் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர். சனி பகவான் எல்லா ராசிகளுக்கும் பல்வேறு சிரமங்களை அளித்தாலும் இந்த குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு மட்டும் பெரிய கஷ்டங்களைக் கொடுக்க மாட்டார். மேலும் சனி அருளால் இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்கள் அனைத்தும் குறைவாகவே அனுபவிப்பார்கள்.
சனி பகவானுக்குப் பிடித்த ராசிகளுக்கு எந்தவொரு சனி தோஷமும் அவர்கள் மீது படுவதில்லை. சனி பகவான் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்.
சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப நீதி வழங்குவார் என்று கூறப்படுகிறது. அதுபோன்று கந்த சனி மற்றும் 7ஆம் சனியின் போது ஒவ்வொரு நபரும் சனியின் கெட்ட நேரத்தை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிகள் சனி பகவானுக்குப் பிடித்த ராசிகள் கூறுகின்றன. இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிதாக எந்தவொரு தீங்கும் சந்திக்க மாட்டார்கள்.
ரிஷபம்: இந்த ராசியினுக்குச் சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும். ரிஷபம் ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கும் மற்றும் சனிக்கும் உள்ள நட்பு நல்ல பலன்களைத் தரும்.
துலாம்: சனி வேற்று கிரகத்துடன் அமைந்திருந்தால் இந்த ராசியினுக்கு நல்ல சுப பலன்களை வழங்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
மகரம்: சனியின் விருப்பமான ராசிகளுள் ஒன்று மகர ராசி. சனி இந்த ராசியின் அதிபதியாக இருக்கிறார். எனவே இவர்களுக்கு ஏழரைச் சனி இருந்தாலும் பெரிய கஷ்டங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
கும்பம்: சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மற்றொரு ராசி கும்பம். இந்த ராசியின் அதிபதியும் சனி பகவான். இந்த ராசிக்காரர்களிடம் சனி பகவான் எப்போதும் கருணையுடன் இருப்பார்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.