புத ஆதித்ய யோகத்தினால் ராஜயோக பலன்களை பெறும் ‘சில’ ராசிகள்!

Bhudha Aditya Yogam & LUCKY Zodiacs: புதன் பிப்ரவரி 27, 2023 அன்று, கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. 

Bhudha Aditya Yogam & LUCKY Zodiacs: புதன் பிப்ரவரி 27, 2023 அன்று, கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. 

 

1 /6

கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுபமான ராஜயோகத்தை உருவாக்குகிறது. பிப்ரவரி 27, 2023 அன்று, புதன் சனியின் ராசியான கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த கூட்டணி மார்ச் 15 வரை நீடிக்கும். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சிறப்பான பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /6

தனுசு: புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புத-ஆதித்ய யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடன் பழகும் நபர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், உங்களைப் புகழ்வார்கள்.

3 /6

துலாம்: இம்முறை மார்ச் 15 வரை துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளும் தொடங்கும். தேர்வு-போட்டி, நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பண வரவும் சாதகமாக இருக்கும்.

4 /6

மிதுனம்: புத-ஆதித்ய யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த நேரம் வணிகத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

5 /6

ரிஷபம்: மார்ச் 15 வரை புதன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அது உங்கள் வேலையில் எளிதாக வெற்றியைத் தரும். வருமானம் அதிகரிக்கும். சில பெரிய சாதனைகளை அடையலாம்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.