Cost Of Burring Body: ஒருவரை அடக்கம் செய்வதற்கான செலவு எவ்வளவு ஆகும்? இறந்த ஒரு நபரை புதைக்க சுமார் 5 மில்லியன் ஈராக் தினார்கள் அளவு செலவாகும் சுடுகாடு, ஈராக்கில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய இடுகாடாகும்.
உலகின் மிகப்பெரிய கல்லறை எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? தினமும் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்படும் இந்த மயானம் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? 14 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த மயானத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கதைகளும் நம்பிக்கைகளும் ஆச்சரியமளிப்பவை.
ஈராக்கின் நஜாப் நகரில் அமைந்துள்ள இந்த இஸ்லாமிய கல்லறை உலகிலேயே மிகப்பெரிய கல்லறையாக கூறப்படுகிறது.
ஈராக் மக்கள் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய பயன்படுத்திய இந்த இடுகாடு, காலப்போக்கில் மிகப் பெரியதாகி, இப்போது உலகின் மிகப்பெரிய கல்லறை என்று அறியப்படுகிறது.
இந்த கல்லறையின் பெயர் வாடி அல்-சலாம் (Wadi al Salam) அதாவது அமைதியின் பள்ளத்தாக்கு.
ஷியா முஸ்லீம்களுக்கு புனிதமானதாக கருதப்படும் இந்த நகரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்
ஈராக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம் அதிகமானதில் இருந்து இந்த கல்லறை பெரிதாகி வருகிறது.
இங்கு லட்சக்கணக்கான மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர். ஷியா முஸ்லிம்கள் ஏன் இந்த இடுகாட்டில் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய விரும்புகிறார்கள்? இதற்கான பதிலும் சுவாரஸ்யமானது.
ஷியா முஸ்லீம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் போரிடுவதற்கு முன்பு இந்த இடத்திற்கு அடிக்கடி வருகை தருகிறார்கள், மேலும் அவர்கள் இறந்தால், தங்கள் தியாகத்திற்கு வெகுமதியாக வாடி அல்-சலாமில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
இந்த மயானத்தின் பரப்பளவு அதிகரித்து வருவதால். இங்கு நிலம் பற்றாக்குறை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அதாவது சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இங்கு ஒருவரை அடக்கம் செய்வதற்கான செலவு சுமார் 5 மில்லியன் ஈராக் தினார்களை எட்டியுள்ளது.