சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2024 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசன், சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் க்ளீசனை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. ரிச்சர்ட் க்ளீசன் 6 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார்.
டெவோன் கான்வே ஐபிஎல் 2023ல் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணாமான வீரர்களில் ஒருவர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
36 வயதான க்ளீசன் சமீபத்தில் ILT20 இரண்டாவது சீசனில் வளைகுடா ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முஸ்தாபிசுர் ரஹ்மான் மே 2 வரை மட்டுமே சென்னை அணிக்காக விளையாடுவார் என்பதால் அதனை மனதில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிச்சர்ட் க்ளீசனை அணியில் எடுத்துள்ளது.