பஞ்சாப்பை பதறவைத்த பீரிவிஸ் யார்?

பஞ்சாப்பை அணியை கதறவிட்ட பிரெவிஸ் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்

ஏபி டிவில்லியர்ஸின் அடுத்த வெர்சனாக பார்க்கப்படுகிறார் பிரவீஸ். 19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார். 

1 /4

அவரின் பேட்டிங் ஸ்டைலை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணிக்கு தூக்கியது. 

2 /4

அவர் மீது மும்பை வைத்த நம்பிக்கையை பிரெவிஸூம் காப்பாற்றியுள்ளார். பெங்களூருக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

3 /4

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அந்த அணியை கலகலக்க வைத்தார். ராகுல் சாஹரின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 

4 /4

25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 49 ரன்களை விளாசினார். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை பறக்கவிட்டு பஞ்சாப் கூடாரத்தை கலகலக்க வைத்தார். அதேநேரத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.