Diwali 2024 Plants For Good Wealth And Fortune : 2024 வருடத்தின் தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இந்த நாளில், எந்தெந்த செடிகளை வீட்டில் நட்டு வைத்தால் நல்லது நடக்கும்? செல்வம் கொழிக்கும்? லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Diwali 2024 Plants For Good Wealth And Fortune : தாவரங்கள் மற்றும் செடிகள், நம் வீட்டை அழகாக்குவதோடு நம் மனதையும் அழக்காக்கும் தன்மை கொண்டது. தீபாவளி வரவிருக்கும் இந்த சமயத்தில், பலர் தங்கள் வாழ்வில் நல்ல தொடக்கத்திற்காக காத்துக்கொண்டிருப்பர். நல்ல தொடக்கத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் நாம், அதற்கு நம்மை தயார் படுத்துவதும் அவசியம் ஆகும். அந்த வகையில், நம் வாழ்விலும் வீட்டிலும் செல்வம், அதிர்ஷ்டம் அகியவை செழிக்க சில செடிகளை நட்டு வைக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?
White Palash (புட்டியா பர்விஃப்ளோரா) செடியை நடுவதால், மகாலட்சுமி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டில் இருப்பவர்கள் உடல் நலம் பெற்று, செல்வமும் வந்து சேரும்.
துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் குடும்பத்தினர் உடல் நலம் பெற்று, செல்வமும் பெருகும் என கூறப்படுகிறது.
Snake Plant (பாம்பு கற்றாழை) ஒரு பிரபலமான மூலிகை செடி. இதனை சான்செவெரியா என கூறுவர். இந்த செடியை வீட்டில் வளர்த்தால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும், வாழ்வில் வெற்றி கிட்டும் என்றும் கூறப்படுகிறது.
Orchids (மல்லிகை) செடியை வீட்டில் வளர்ப்பதால், அழகு, இளமை ஆகியவை பல ஆண்டுகளுக்கு நம் கூடவே வரும் என கூறப்படுகிறது. பண வரவு, வாழ்வில் வெற்றி ஆகியவையும் இந்த செடியை வளர்ப்பதால் நிகழலாம்.
Money Plant வளர்ப்பதால், வீட்டில் சுத்தமான காற்று சுழலும் என்பதை பிறர் சொல்லி கேட்டிருப்போம். இதனை, செல்வம் கொழிக்கவும் வளர்க்கலாம்.
Jade Plant (குபேர செடி) செடியை வளர்ப்பதால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும் என கூறப்படுகிறது. கூடவே, இதை வளர்த்தால் வீட்டில் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காதாம்.
மூங்கில் செடி வளர்ப்பதால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்புடன் நம்மால் திகழ முடியுமாம்.
கற்றாழை செடி வளர்ப்பதால் உடலுக்கு மட்டுமல்ல நம் வாழ்வுக்கும் நல்லது. இதனால் சொத்துக்கள் சேர்க்கும் வாய்ப்பு கிட்டும் என கூறப்படுகிறது. (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)