பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நாம் அறிந்த விடயம் தான்.
அதே நேரத்தில் பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக கலந்து சாப்பிடுது ஆரோக்கியமற்ற ஒரு செயல் மட்டுமில்லாமல் சில நேரம் அது நம் உயிரையே பறித்து விடும் ஆபத்தை உண்டாக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.
எலுமிச்சை மற்றும் பப்பாளியை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது. இது ஒரு மோசமான காம்பினேஷன் ஆகும். இதனை சேர்த்து சாப்பிடுவதால், இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை ஆகிவை உண்டாகின்றன.
வாழைப்பழத்துடன் புட்டிங் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகி, நச்சு உற்பத்தியை உடலில் ஊக்குவிக்கும். இதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது.
கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்வதால் அமில நோய் , குமட்டல், வாய்வு தொந்தரவு மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்றவை உண்டாகின்றன.