Apple iPhone 13: அறிமுக நாள், விலை, சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐபோன் நிறுவன வெளியீட்டு நிகழ்வில்  ஐபபோன் சீரிஸின் 13வது பதிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ஐபோன்கள் பிரியர்கள் அதன் சமீபத்திய மாடலான ஐபோன் 13 போனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஐபோன் 13  போனில் பல அம்சங்கள் இணைந்து மேம்படுத்தப்பட்ட ஐபோனாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆப்பிளின் ஐபோன் 13 தொடர்பாக ஆன்லைனில் பல்வேறு தகவல்கள் கசிகின்றன, வதந்திகளும் உலா வருகின்றன. 

ஐபோன் 13 என்பது, வழக்கமான ஐபோன் 13, பட்ஜெட் சார்ந்த ஐபோன் ,13 மினி மற்றும் ஐபோன் 13 புரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாதம் நிறுவன வெளியீட்டு நிகழ்வில் தற்காலிகமாக வெளியிடப்படலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Also Read | கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Sachin Tendulkar மருத்துவமனையில் அனுமதி

1 /7

ஆப்பிள் ஐபோன் 13 மூன்று திரை அளவுகளில் கிடைக்கும். 5.4-இன்ச், 6.1-இன்ச், 6.7 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும். சிறிய அளவிலான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தானாகவே திரை இடத்தை அதிகரிக்கும்.

2 /7

ஐபோன் 13 போனில் கைரேகை ஸ்கேனர் உள்ளீடாக பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றுநோய் பரவலால் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என்பதால், முக அங்கீகாரம் மூலம் தொலைபேசிகளைத் திறப்பது மிகவும் கடினம். ஐபோன் 13 மாடலில் இந்த அம்சம் இருந்தால், அது, காலத்திற்கேற்ற மாறுதலாக, கைரேகை ஸ்கேனரை அடிப்படையாகக் கொண்ட முதல் ஐபோன் என வரலாற்றில் பெயர் பெறும்.

3 /7

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸின் விலை 69,990 முதல் 1,49,990 ரூபாய் வரை இருக்கலாம்

4 /7

Always-on display ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் வழக்கமான அம்சமாக இருக்கும், இது ஐபோன் 13 உடன் iOS இல் பொருத்தப்படலாம்

5 /7

ஆப்பிள் ஐபோன் 13 எஃப் / 1.8 லென்ஸுடன் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  புரோ மாடல்களுக்கு மட்டுமே மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

6 /7

ஆப்பிள் ஐபோன்கள் 13 ப்ரோ வரிசை ஒரு உயர்நிலை எல்டிபிஓ திரையைக் கொண்டிருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.. எல்.டி.பி.ஓ என்பது ஒரு சிறந்த மற்றும்  power-efficient backplane தொழில்நுட்பமாகும், இது தனிப்பட்ட பிக்சலை காட்சிக்கு ஏற்றவாறு ஆன் மற்றும் ஆஃப் செய்யக்கூடியது. இது புரோ மாடல்களில் பேட்டரி நீண்ட காலம் உழைக்க உதவுகிறது.  

7 /7

ஐபோன் 13 சீரிஸ் பற்றி எந்த சார்ஜிங் போர்ட்டும் வரவில்லை என்று ஏராளமான வதந்திகள் உள்ளன. இதன் பொருள் ஐபோன் 13 ஒரு மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். வயர்லெஸ் சார்ஜிங் கொண்டதாக இருக்கும். ஆப்பிளின் மாக்ஸேஃப் சார்ஜர்களை (MagSafe chargers) வாங்குவது அவசியம் என்று பொருள் கொள்ளலாம்.