Maha lakshmi | செல்வத்தை வாரி வழங்கும் மகா லட்சுமி தெய்வத்துக்கு பிடிக்காத விஷயங்களை செய்தால் கோடீஸ்வரராக இருந்தாலும் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
Maha lakshmi Rules | செல்வத்தை கொடுக்கும் மகா லட்சுமியின் அருள் இருப்பவர்கள் மட்டுமே கோடீஸ்வரராக இருக்க முடியும். அந்த தெய்வத்துக்கு பிடிக்காத விஷயங்கள் சில உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் வறுமையின் கோர பிடியில் இருந்தாலும், மகா லட்சுமியின் அருள் பார்வை மட்டும் பட்டுவிட்டால் இரவு பகலாவதைப் போல வறுமையில் இருந்து கோடீஸ்வரராக மாறிவிடுவார்கள். ஆனால், அதே மகா லட்சுமி கோபம் கொண்டால் கோடீஸ்வரர் கூட தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் எல்லோரும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். கூடவே புதன் பெயர்ச்சி, சுக்கிரன் சேர்க்கை எல்லாம் நடைபெறும் இந்த நேரத்தில் மகா லட்சுமிக்கு பிடிக்காத விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்
நல்ல நேரம் பிறக்கும் இந்த தருவாயில் நல்ல விஷயங்களை செய்யும்போது உங்களின் செல்வமெல்லாம் இரட்டிப்பாக மாறும். எந்த இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் உங்களின் செல்வத்தை இரட்டிப்பாக்கும் சாவி அன்னை லட்சுமி தேவியிடம் மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதனால் மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்களை பார்க்கலாம். வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் வீட்டை சுத்தமாக கூட்டி பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மகா லட்சுமி வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்து செல்வார்.
தீபாவளி நாளில் மது, இறைச்சி, சாராயம் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் அன்னை லட்சுமி உங்கள் வீட்டை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள், உங்கள் வாழ்க்கை வறுமையில் கழியும்.
தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடும் போது இரும்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். அதேபோல் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். செம்பு, பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தவும். இது முடியாவிட்டால் மண் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
வீட்டில் உள்ள தாய், சகோதரி, மகள், மனைவி போன்ற பெண்களை அவமதிக்கும் பெரும் பாவத்தைச் செய்யாதீர்கள், ஏனென்றால் அவர்கள் அனைவரும் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். இதை ஒருபோதும் செய்யக்கூடாது. குறிப்பாக தீபாவளி நாளில் இந்த தவறை தெரியாமல் கூட செய்துவிடாதீர்கள்.
தீபாவளி நாளில் யாருக்கும் கடன் கொடுக்கவோ, யாரிடமும் பணம் வாங்கவோ கூடாது. அதை மட்டும் நீங்கள் செய்தால் ஆண்டு முழுவதும் கடனிலேயே இருப்பீர்கள்.
தீபாவளி மற்றும் குறிப்பாக பூஜையின் போது நீல-கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டாம். அதுபோன்ற ஆடைகளை வழிபாட்டில் பயன்படுத்த வேண்டாம். லட்சுமிக்கு இந்த நிற ஆடைகளை பிடிக்காது.