தென்னாஃப்ரிக்காவின் மோசமான வானிலை! நூற்றுக்கணக்கான யானைகளை பலி கொண்ட வறட்சி

Kenya Drought: தென்னாஃப்ரிக்காவின் மோசமான வானிலை, வரலாறு காணாதது. நூற்றுக்கணக்கான யானைகள் உட்பட வனவிலங்குகள் மோசமான வானிலைக்கு பலியாகின.  

வெந்து தணிந்ததா காடு?

1 /6

கடந்த ஆண்டில் கென்யாவில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. இதனால் அங்கு வறண்ட வானிலை நிலவுகிறது.

2 /6

கென்யாவில் கடும் வறட்சி போன்ற சூழல் நிலவுகிறது. மேலும் இந்த வறட்சியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறந்து வருகின்றன. இதில் அரிய விலங்குகளும் அருகி வரும் விலங்குகளும் அடங்கும்.

3 /6

கென்யா வனவிலங்கு சேவை மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள், வறட்சி போன்ற வறண்ட வானிலை காரணமாக இறந்த விலங்குகளின் பட்டியலை வழங்கியுள்ளன. இவை மிகவும் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன

4 /6

205 யானைகள், 512 காட்டு மான்கள், 51 காட்டெருமைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள், 381 வரிக்குதிரைகள் மற்றும் 49 கிரேவி வரிக்குதிரைகள் வெப்பம் காரணமாக கடந்த 9 மாதங்களில் இறந்துள்ளன, இது ஏற்கனவே அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவை ஆகும்

5 /6

கென்யாவின் பிரபலமான தேசிய பூங்காவான பிஸ்வா ஜோராவில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் காணப்படும். பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இந்த வனப்பகுதி தற்போது மிகவும் சீர்குலைந்த சுற்றுச்சூழல் கொண்ட இடமாக மாறியுள்ளது.

6 /6

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால், வறட்சி பாதித்துள்ள பகுதிகளில் நீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 240 லிட்டர் தண்ணீரை தேவை. போதுமான  குடிநீர் வசதி செய்யப்பட்டால் சில விலங்குகளை மட்டுமாவது காப்பாற்ற முடியும்!