முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய நன்மை நிறைந்தது. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது.
மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள். முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
முருங்கை கீரையில், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. முருங்கை கீரையை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும்.
முருங்கை கீரையில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கை இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.
குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால். உடல் பருமனை குறைக்க வேண்டுமானால் முருங்கை இலைகளை பயன்படுத்தலாம். அதிகரித்த எடையைக் குறைக்க பெரிதும் உதவும்.
நீரிழிவு நோயைக் சிறப்பாக கட்டுப்படுத்த உதவும். முருங்கை காய்கள், பூ மற்றும் இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதனால் நீரிழிவு நோய்க்கு முருங்கை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் சிறந்தது. ஒரு ஆய்வில், முருங்கைகாய் கஷாயம் அருந்திய பங்கேற்பாளர்களுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முருங்கை டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் உடல் முழுவதிலும் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள யூரிக் அமிலம் குறைந்து, கீல்வாதத்தின் வலியும் குறையத் தொடங்குகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.