நம்மை யாராவது நினைததுப் பார்த்ததால் விக்கல் வரும் என்பார்கள் நமது முன்னோர்கள். ஆனால் இதற்கு அறிவியல் சரியான சான்றுகள் இல்லை. விக்கல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். விக்கல் வர பல காரணங்கள் இருக்கலாம். விக்கல் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், சிலருக்கு அதிக விக்கல் எடுக்கும். பொதுவாக இவர்கள் தண்ணீர் குடிப்பதன் மூலம் நிவாரணம் பெறுவார்கள். ஆனால் சில நேரங்களில் தண்ணீர் எந்த வித நிவாரணத்தையும் தருவதில்லை. மருத்துவ அறிவியலின் படி, உதரவிதானம் மற்றும் விலா எலும்புகளுக்கு இடையில் உள்ள இண்டர்கோஸ்டல் தசைகள் திடீரென சுருங்குவதால் விக்கல் ஏற்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி, வெதுவெதுப்பான நீரில் ஏலக்காய் பொடியை கலந்து குடித்தால் விக்கல் குணமாகும். இதற்கு ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, வடிகட்டி குடிக்கவும்.
விக்கலை நிறுத்த சர்க்கரை பயனுள்ளதாக இருக்கும். விக்கல் நிற்கவில்லை என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிடுங்கள். சர்க்கரையின் இனிப்பினால் விக்கல் சிறிது நேரத்தில் நீங்கும்.
விக்கல் வராமல் இருக்க, ஒரு ஸ்பூன் கருப்பு மிளகுப் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கருப்பு மிளகு மெதுவாக வாசனை உள்வாங்கிக்கொள்ளுங்கள். நீங்கள் தும்மல் வரும் வரை இதைச் செய்யுங்கள். தும்மல் வந்தவுடன் விக்கல் நின்றுவிடும்.
விக்கலை நிறுத்த தயிர் மற்றொரு நல்ல மருந்து. விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் தயிர் சாப்பிடுங்கள். தயிர் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஆயுர்வேதத்தின் படி, விக்கல்களில் இருந்து விரைவான நிவாரணம் பெற இஞ்சியின் உதவியை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இது விக்கல்களை உடனே நிறுத்தும்.