இஞ்சி - சுக்கு: உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பது எது

நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழி உண்டு அதனை வைத்தே அதன் மருத்துவ குணத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

1 /5

இஞ்சியுடன் ஒப்பிடும்போது சுக்கு ஜீரணிப்பதற்கு எளிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

2 /5

இஞ்சி சளியை குணப்படுத்துவதில் சிறந்து தான் என்றாலும் சுக்கு உடலில் சூட்டை உண்டாக்கவும், சளியை குணப்படுத்தவும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. 

3 /5

அஜீரணம் வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பல பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமையான நிவாரணம் அளிக்கும் என்றால் மிகையில்லை.

4 /5

உலர்ந்த இஞ்சியான சுக்கு என்பது இஞ்சியை விட அதிக நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். சுக்கை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தலாம்.  

5 /5

இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், உடல் மற்றும் மன சோர்வு விலகி புத்துணர்ச்சி தானாக வரும். பொதுவாக இஞ்சி - சுக்கு இரண்டுமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து தான். நமது உடலி உள்ள பிரச்சனை மற்றும் உடலின் தேவைக்கு ஏற்ப இதனை உட்கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.