இஞ்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு பொருள் ஆகும். அனைத்து பருவ காலங்களிலும் உண்ணக்கூடிய பொருளாக இஞ்சி உள்ளது. குறிப்பாக தினம் பருகும் தேநீருடன் இஞ்சியை சேர்த்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது. எடை இழக்க விரும்புவோருக்கு இஞ்சியும் மிகவும் நன்மை பயக்கும் ஒரு பொருள் ஆகும். எனவே இஞ்சியின் சில நன்மைகளை நாம் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்: தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
மூட்டு வலி பிரச்சனைகளுக்கு தீர்வு: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும். மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது.
மைக்ரேன் தலைவலிக்கு நிவாரணம்: மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. இஞ்சி பொடியாலான ‘சுமாட்ரிப்டன்’ எனும் மருந்து மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகளுக்கு நல்ல பலனை வழங்குகிறது என்பதுதான்.
மாதவிடாய் வலிக்கு நிவாரணம்: மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது.
புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது: பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.