Saturn Transit: நமது சாஸ்திரங்களின் படி, சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். யார் எப்படிப்பட்ட கர்மாக்களை செய்கிறார்களோ, அவற்றுக்கு ஏற்றவாரு சனி பகவான் பலன்களை அளிக்கிறார். சனி மகிழ்ச்சியடைந்தால், அவர் நமது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் அகற்றி விடுவார். அதே சமயம், அவர் ஒருவர் மீது கோவம் கொண்டால், அந்த நபரின் வாழ்வில் பேரழிவின் காலம் தொடங்கும். ஆகையால், நாம் நல்லவற்றை செய்தால், சனி பகவான் நமக்கு நல்ல பலன்களையே அளிப்பார் என்பதை நினைவில் கொண்டு நம் பணிகளை செய்ய வேண்டும். சனி அடிக்கடி ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். இவரது இந்த சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கிறது.
சனி பகவான் ஜூலை 12 அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். முன்னதாக அவர் ஏப்ரல் முதல் ஜூலை வரை தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்தார். இப்போது அவர் மகர ராசியில் பிரவேசித்துள்ளதால், 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. அருள் மழை பொழியப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
சனிபகவானின் ராசி மாற்றத்தால் மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கி லாபகரமான தொழிலில் முதலீடு செய்யலாம். இந்த கலாத்தில் உங்கள் வருமானத்திற்கான புதிய ஆதாரங்களும் உருவாக்கப்படும். இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெறுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழில்களில் பதவி உயர்வு பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தொகையை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தனுசு ராசிக்காரர்கள் அவர்கள் புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். குழந்தைகளின் கல்வியில் நிம்மதி கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
மகர ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்பார்க்காத இடத்திலிருந்து திடீரென்று பெரும் பணம் வரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)