Tamil Nadu Latest News: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.
Tamil Nadu Government Employees News: தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுக்கான நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் நலன் கருதி குழுவை அமைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுக்கான நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைக்கப்பட்ட இந்த குழுவில், அமைச்சர்கள் எ.வா. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.