PM Internship | 21 வயது நிரம்பிய மாணவர்களுக்கு குட்நியூஸ்..! உடனே விண்ணப்பிக்கவும்

PM Internship திட்டத்தில் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PM Internship திட்டத்தின் கீழ் தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

 

1 /8

பள்ளி மற்றும் கல்லூரி முடித்த மாணவ, மாணவிகள் சுயதொழில் மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

2 /8

குறிப்பாக மத்திய அரசு PM Internship திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புபவர்கள் மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர பிஎம் இன்ட்டெர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

3 /8

PM Internship திட்டம் வாயிலாக ஐந்தாண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு Internship பயிற்சி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் (2024-2025) 1.25 இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

4 /8

PM Internship திட்ட காலம்: 12 மாதங்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி கொடுக்கப்படும். வயதுவரம்பு: 21-24 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். தகுதி- விண்ணப்பதாரர் National Apprenticeship Promotion Scheme (NAPS) திட்டத்தின்கீழ் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருத்தல் கூடாது.

5 /8

முழுநேர பணி அல்லது முழுநேர கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டிருத்தல் கூடாது. இந்த விதிமுறைகளுக்குள் நீங்கள் இருத்தால் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

6 /8

நிதி உதவி- மாதாந்திர உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.5,000/- மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ரூ.6,000/- ஒரு முறை வழங்கப்படும். கூடுதல் விவரங்கள்:http:/www.pmintermship.mca.gov.in' என்ற இணைய முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 

7 /8

ஓராண்டு கால பயிற்சியுடன் கூடிய உதவித்தொகை பெறலாம். எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

8 /8

தொலைபேசி எண் 04146-294989 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதேபோல் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.