மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை

Tamil Nadu government | மாற்றுத் திறனாளிகள் இலவச ஸ்கூட்டர் திட்டத்துக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர் திட்டத்துக்கு (Tamil Nadu government free scooter scheme) மாற்றுத் திறனாளிகள் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1 /9

Tamil Nadu government free scooter scheme | தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகளிடம் பெற்று மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள் பயன்படுத்தபடுவதாக புகார் இருக்கும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் உறுதியாக வாங்கித் தருவதாக கூறி இடைத்தரகர்கள் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

2 /9

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் இலவச ஸ்கூட்டர் பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மாற்றுத் திறானிகளை ஏமாற்றும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

3 /9

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பெற ஏஜென்ட்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். 

4 /9

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட கால்கள் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும், பணிக்குச் செல்லும், சுய தொழில் செய்யும், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இயவசமாக வழங்கப்படுகிறது.

5 /9

2020-2021-ஆம் ஆண்டிற்கு 70 எண்ணிக்கையும், 2021-2022-ஆம் ஆண்டிற்கு 195 எண்ணிக்கையும், 2022-2002-ஆம் ஆண்டிற்கு 125 எண்ணிக்கையும், 2023-2024-ஆம் ஆண்டிற்கு 412 எண்ணிக்கையும் என கடந்த ஆண்டு வரையில் 802 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

6 /9

நடப்பாண்டு 300 எண்ணிக்கையிலான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு பெறப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான தேர்வுக்குழுயால் தேர்வு செய்யப்பட்ட பாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இணைப்புச் சக்கரங்களை நீக்கிவிட்டு, மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் பயன்படுத்தவதாகவும், மாற்றுத்திறனாளிகளே அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டர்களை விற்பதாகவும் புகார்கள் பெறப்படுகிறது. 

7 /9

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் சங்கங்கள் பெயரில் வாங்கித் தருவதாக கூறி, ஏஜென்ட்டுகள் பணம் பெற்றுக் கொண்டு ஏபாற்றுவதாகயும் புகார்கள் வருகிறது. இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் எப்கூட்டர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்று விற்கும் சங்கங்கள், பணம் பெற்று விற்கும் ஏஜெனீட்டுகள் கடுமையாக தண்டிக்கபடுவார்கள்.

8 /9

மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் பெற பணம் கோறுபவர் குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு கணிகாணிப்பு அலுவலக தொலைபேசி எர்-04151-290600-ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 

9 /9

ஏஜென்ட்டுகளிடம் ஏமாறாமல், இலவச இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை மாற்றுத்திறனாளிகள் நேரில் அணுகி இலவசமாக பெற்று பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்" திரு.எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.