செல்வ மழை பொழியும்.. சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Saturn Transit 2023: நீதியின் கடவுளான சனியின் பெயர்ச்சி அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இரண்டரை ஆண்டுகளில் தனது ராசியை மாற்றும் சனி, 2023 ஜனவரியில் கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார்.

சனி பகவான் கடந்த மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நுழைந்தார். 2027 ஜூன் இரண்டாம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார் சனி. இந்த பயணம் பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அந்த ராசிகலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

1 /8

கும்பத்தில் சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். 2025 வரை சனி இந்த ராசியில் தான் இருப்பார். அதாவது இரண்டரை வருடங்களாக சனி கும்ப ராசியில் இருப்பார். கும்பத்தில் சனியின் இருப்பு மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும். எனவே, சில ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் அற்புதம். இவர்களுக்கு சனியால் செல்வமும் பெரும் வெற்றியும் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2025 வரை காலம் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /8

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் உங்களின் நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லலாம்.  

3 /8

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் மிகவும் அனுகூலமானது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் பணி சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதால் மிகுந்த நிம்மதியை உணர்வீர்கள். புதிய வேலையில் சேரலாம். வாகனம், சொத்து வாங்க முடியும்.  

4 /8

சிம்ம ராசி: சனி பகவான் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகித் தருவார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.   

5 /8

துலாம் ராசி: சனிபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிறந்த வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.   

6 /8

மகர ராசி: சனி உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றார். உங்களது மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  

7 /8

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும், ஏனெனில் சனி கும்பத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு சனி நினைத்துக் கூட பார்க்க முடியாத பலன்களைத் தருவார். தன்னம்பிக்கை அதிகரிக்கும், நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிலுவையில் உள்ள முக்கியமான பணிகள் அனைத்தும் முடிவடையும்.  

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Next Gallery