மூத்த குடிமக்களுக்கு வசதியான சிறந்த FD திட்டங்கள்... வட்டி பெருசா கிடைக்கும்!

SBI FD Schemes For Senior Citizens: எஸ்பிஐ வங்கியில் மூத்த குடிமக்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும் FD திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Fixed Deposits திட்டங்கள் என்றாலே குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நீங்கள் உங்களின் முதலீட்டை டெபாசிட் செய்து வைத்திருப்பீர்கள். அதன்மீது உங்களுக்கு வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) மற்றவர்களை விட அதிகமான வட்டி விகிதமே வழங்கப்படும். அந்த வகையில், எஸ்பிஐ வங்கியின் (SBI) வெவ்வேறு FD திட்டங்களில் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

1 /8

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank Of India), நாட்டின் மிகப்பெரிய வங்கி மற்றும் நிதிச்சேவை சார்ந்த நிறுவனமாகும். இங்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலான FD திட்டங்கள் ஏராளமாக இருக்கிறது. எப்போது அனைத்து டெபாசிட் திட்டங்களிலும் வழக்கமான வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே வழங்கப்படும். 

2 /8

அந்த வகையில், எஸ்பிஐ வழங்கும் இந்த FD திட்டங்கள் (SBI FD Schemes) மூத்த குடிமக்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கத்தக்கது. எனவே, இது சிறந்த முதலீட்டுக்கான வாய்ப்பாகவும் கூறலாம். அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் உள்ள மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) பல்வேறு FD திட்டங்களில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.   

3 /8

5 ஆண்டுகளுக்கான FD திட்டம்: இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 7.50% வட்டி விகிதம் கிடைக்கும். அதன்மூலம் மூத்த குடிமக்கள் 1,44,995 ரூபாயை பெறுவார்கள். 

4 /8

3 ஆண்டுகளுக்கான FD திட்டம்: இத்திட்டத்தில் 7.25% மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதமாக வழங்கப்படும். ஒரு லட்சம் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளுக்கு பின் 1,24,055 ரூபாயை பெறுவீர்கள். 

5 /8

2 ஆண்டுகளுக்கான FD திட்டம்: இதிதிட்டத்தில் ரூ.7.50% வட்டி கிடைக்கும். 2 வருடத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 1,16,022 ரூபாயை பெறுவீர்கள்.

6 /8

ஓராண்டுக்கான FD திட்டம்: இதிதிட்டத்தில் ரூ.7.30% வட்டி கிடைக்கும். ஓராண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 1,07,502 ரூபாயை பெறுவீர்கள்.

7 /8

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்: இந்த திட்டத்தின் மொத்த காலம் 444 நாள்கள் ஆகும். இதில் 7.75% வட்டி கிடைக்கும். இதில் 1 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், இறுதியில் ரூ.1,09,930 ரூபாயை பெறுவீர்கள். 

8 /8

மேலும் மூத்த குடிமக்கள் தங்களின் வாரிசுகளின் பெயரையும் இந்த திட்டங்களில் குறிப்பிட்டு வைத்துக்கொள்ளலாம். மூத்த குடிமக்கள் கடன் எதுவும் பெற வேண்டும் என்றால் இந்த FD திட்டத்தை காட்டியும் கடன் பெறலாம். வழக்கத்தை விட இதற்கு வட்டி விகிதம் குறைவாக கிடைக்கும்.